சுடச்சுட

    

    கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறில் இருவர் காயமடைந்தனர். இதுதொடர்பாக இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    கோவில்பட்டி மந்தித்தோப்பு மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர், தனது நண்பர் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த அ.சதீஷ்குமாருடன் (24) அப்பகுதியில் உள்ள கோயில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தாராம்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த அ.சங்கரநாராயணன் (25), அவருடைய சகோதரர் செண்பகராஜ் (20), கருத்தப்பாண்டி மகன் கண்ணன் (20) மற்றும் அருண் ஆகியோர் அவர்களிடம் தகராறு செய்தனராம்.

    அப்போது ஏற்பட்ட தாக்குதலில், மணிகண்டன் மற்றும் சங்கரநாராயணன் இருவரும் காயமடைந்தனர். இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், செண்பகராஜ், கண்ணன் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தப்பி ஓடிய அருணை தேடி வருகின்றனர்.

    மேலும், சங்கரநாராயணன் அளித்த புகாரின் பேரில், மணிகண்டன் மற்றும் சதீஷ்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai