சுடச்சுட

  

  எட்டயபுரம் பாரதி மணிமண்டப வளாகத்தில் இலக்கியச் சந்திப்பு நடைபெற்றது.

  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற சார்பு அமைப்பான பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கருப்பூர் பள்ளித் தலைமையாசிரியை கீதா தலைமை வகித்தார். சங்கப் பொருளாளர் மணிபாரதி முன்னிலை வகித்தார். பாரதிதாசன் பணியும், அணியும் என்ற தலைப்பில் தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல்

  கல்லூரி பேராசிரியை மணிமொழி பேசினார். தொடர்ந்து விவாத அரங்கம் நடைபெற்றது.

  இதில், சங்கரநாராயணன், பரமானந்தம், முத்துகிருஷ்ணன், பொன்ராமகிருஷ்ணன், வீரப்பட்டி கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  பாரதி ஆய்வாளர் இளசைமணியன் வரவேற்றார். சங்கச் செயலர் முருகேஷ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai