சுடச்சுட

  

  ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

  By கோவில்பட்டி  |   Published on : 02nd June 2015 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டியில் தெரு வியாபார தொழிலாளர்களுக்கு புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை வழங்கக் கோரி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

  அண்ணா பேருந்து நிலையம் முன் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலர் தமிழரசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வடக்கு மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார்.

  மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் நகர வணிகக் குழு அமைக்க வேண்டும். அதில் 40 சதவீத இடங்களை தெரு வியாபாரிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்க வேண்டும்; ஒவ்வொரு ஊரிலும் தெரு வியாபாரிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு அவர்களுக்கு புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் சேது, மாநிலக் குழு உறுப்பினர் ஜானகி, வட்டார நிர்வாகிகள் உத்தண்டராமன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai