சுடச்சுட

    

    கருங்கடலில் 1,521 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்

    By சாத்தான்குளம்  |   Published on : 02nd June 2015 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கருங்கடல் ஊராட்சியில் 1,521 பேருக்கு தமிழக அரசின் விலையில்லாப் பொருள்களான மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.

    சாத்தான்குளம் அருகே கருங்கடல் ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவுக்கு, ஊராட்சித் தலைவர் தங்கசெல்வி அருள்ராஜ் தலைமை வகித்தார். ஆழ்வார்திருநகரி ஒன்றியக்குழுத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். சாத்தான்குளம் வட்டாட்சியர் ப. வாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

    திருச்செந்தூர் கோட்டாட்சியர் தெ.  தியாகராஜன் 1,521 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் வழங்கிப் பேசினார்.  இதில், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜி, மஸபியேல், விஸ்வநாதன், செந்தில்முருகன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய அதிமுக செயலர் ஷேக்தாவூது,  ஊராட்சி துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன், ஊராட்சி செயலர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சிறப்பு செயலாக்க திட்ட துணை வட்டாட்சியர் சுந்தரராகவன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai