சுடச்சுட

  

  கருங்குளத்தில் அரசுப் பேருந்து மோதி 4 ஆடுகள் பலி

  By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 02nd June 2015 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கருங்குளத்தில் அரசுப் பேருந்து மோதி 4 ஆடுகள் இறந்தன.

  கருங்குளம் ஆற்றிலிருந்து ஆடுகள் கூட்டமாக திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் சென்றன. அப்போது, திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசுப் பேருந்து மோதியதில் 4 ஆடுகள் இறந்தன. 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்தன.

  இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தினார். விபத்து நிகழ்ந்த இடத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளதால், அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai