சுடச்சுட

  

  கோவில்பட்டி, கழுகுமலை முருகன் கோயில்களில் விசாகத் திருவிழா

  By கோவில்பட்டி  |   Published on : 02nd June 2015 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் ஆகியவற்றில் வைகாசி விசாகத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

  கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீபூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த கதிர்வேல் முருகன் கோயிலில், காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

  அதைத் தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, வர்ண பூஜை, கந்த பூஜை ஆகியவை நடைபெற்றன. காலை 10.30-க்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கும், தண்டாயுதபாணி சுவாமிக்கும் மஞ்சள், பால், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்பட 18 வகையான பொருள்கள் மூலம் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  இதேபோல் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள உற்சவர் கார்த்திகேயப் பெருமானுக்கும், வள்ளி, தெய்வானை உள்பட பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

  கழுகாசலமூர்த்தி கோயில்: கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடைவறை கோயிலில் காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai