சுடச்சுட

  

  கோவில்பட்டி ரயில் நிலையத்தில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

  By கோவில்பட்டி  |   Published on : 02nd June 2015 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நிலையம் மற்றும் ரயில் பயணத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

  தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் ரயில் பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான முகாம் மே 26முதல் ஜூன் 9ஆம் தேதிவரை நடைபெறுகிறது.  இதையொட்டி, பயணிகள் ஓடும் ரயிலிலிருந்து இறங்கக் கூடாது. ரயில் பயணத்தின் போது தெரியாத நபர்களிடமிருந்து எந்தவொரு உணவுப் பொருள்களையும் வாங்கி உண்ணக் கூடாது என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் விநியோகிக்கப்பட்டது.

  நிகழ்ச்சிக்கு மதுரை கோட்ட ரயில்வே மின் பொறியாளர் பிரசாத் தலைமை வகித்து, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார். போக்குவரத்து ஆய்வாளர் சேதுராமன், கோட்ட வர்த்தக ஆய்வாளர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தொடர்ந்து, ரயில் நிலையத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கான பணியை கோட்ட ரயில்வே மின் பொறியாளர் தொடங்கிவைத்தார்.

  நிகழ்ச்சியில், சாரணர் இயக்க மாணவர், மாணவிகள், ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai