சுடச்சுட

  

  பாதயாத்திரை பக்தர்களுக்கு பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் அளிப்பு

  By தூத்துக்குடி  |   Published on : 02nd June 2015 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பாதுகாப்பு பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் அணிவிக்கப்பட்டன.

  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு வைகாசி விசாகத் திருவிழாவுக்காக தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.

  பாதயாத்திரை பக்தர்களுக்கு விபத்தை தவிர்க்கும் வகையில், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் வழங்கப்பட்டது. அதேபோல், நிகழாண்டில் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான ஒளிரும் ஸ்டிக்கர்கள் கடந்த மாதம் 5 ஆம் தேதிமுதல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஸ்டிக்கர்களை ஐயப்பா சேவா சங்கத்திடம், ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கியது. 

  தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதயாத்திரை பக்தர்களுக்கு ஸ்டிக்கர் வழங்கும் பணியை நிறுவன பொதுமேலாளர் செல்வசங்கர் தொடங்கிவைத்தார்.

  இதில், திருச்செந்தூர் தேவஸ்தானம் இணை ஆணையர் பொன் சாமிநாதன், தேவஸ்தான அலுவலர் வெங்கடேசன், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் செல்வகணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  அன்னதானம்

  ஆறுமுகனேரி:திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் வசதிக்காக, ஆறுமுகனேரியில் நீர் மோர் பந்தல், முதலுதவி மையம், தொடர் அன்னதானம் வழங்குதல் ஆகியன நடைபெற்றன.

  பக்தர்கள் வசதிக்காக ஆறுமுகனேரி வடபுறம் சாகுபுரத்திலிருந்து அடைக்கலாபுரம்வரை சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள், சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம், ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தினர், முன்னாள் எம்.பி. கே.டி. கோசல்ராம் குடும்பத்தினர், லட்சுமிமாநகரம் ஸ்ரீமாரியம்மன் கோயில் நிர்வாகம், அதிமுக நகரச் செயலர் எஸ்.பொன்ராஜ், ஆறுமுகனேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், இந்து முன்னணி தெற்கு மாவட்டம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர் மோர் பந்தல், தொடர் அன்னதானம் ஆகியன ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து இரவுவரை நடைபெற்றன. தொழிலதிபர் சு.மகேஷ் சார்பில், ஜெயம் கார்டன் அருகே பக்தர்களுக்கு இளநீர் வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai