சுடச்சுட

    

    பிரிட்டிஷ் தீவில் இருந்து விடுதலையான குமரி மீனவர்கள் ஆட்சியருடன் சந்திப்பு

    By நாகர்கோவில்  |   Published on : 02nd June 2015 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரிட்டிஷ் தீவில் சிறைபிடிக்கப்பட்டு விடுதலையான குமரி மீனவர்கள், மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    குமரி மாவட்டம், தூத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள், கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி கொச்சியிலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களை பிரிட்டிஷ் தீவான டீகோ கார்சியா கடற்படையினர், மே மாதம் 11 ஆம் தேதி சிறைபிடித்தனர்.

    மத்திய, மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு, கடந்த மே 29 ஆம் தேதி ஊர் திரும்பினர். இந்நிலையில் மீனவர்கள் அனைவரும் தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவர் ஜஸ்டின் ஆன்றனி தலைமையில், மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது இனிமேல் எல்லை தாண்டாமல் மீன்பிடிக்குமாறு மீனவர்களை ஆட்சியர் அறிவுறுத்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai