Enable Javscript for better performance
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தூத்துக்குடியில் 5இல் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தூத்துக்குடியில் 5இல் ஆர்ப்பாட்டம்

    By தூத்துக்குடி  |   Published on : 02nd June 2015 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜூன் 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வட்டார, நகர, பொறுப்பாளர்கள் கூட்டம், தூத்துக்குடியில் மாவட்டத் தலைவர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் தலைமையில் நடைபெற்றது. மாநில இணைச் செயலர் சி.எஸ். முரளிதரன் பேசினார்.

    கூட்டத்தில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜூன் 5 ஆம் தேதி தூத்துக்குடியில்  ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், மருதூர் கீழகால், மேலகால் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும்; ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வார வேண்டும்; தமிழக உப்பு தொழிலாளர்களின் நலன் கருதி, குஜராத்திலிருந்து உப்பு இறக்குமதி செய்வதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் கேடிஎம் ராஜா, வேலாயுதம், ரவிகுமார், எடிசன், தங்கத்தாய், நிர்வாகிகள் முருகேசன், சுந்தரலிங்கம், பாரகன் அந்தோணிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai