சுடச்சுட

    

    சிவகிரி அருகே பெண் காவலரின் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

    விருதுநகர் மாவட்டம், கிறிஸ்துராஜபுரம் மேலத் தேவாலயத் தெருவைச் சேர்ந்தவர் மரியசெல்வி(30). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு ரயில்வே காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் கூலித்தொழிலாளியான பாலசுப்பிரமணியன்(35), திருநெல்வேலி மாவட்டம், சொக்கம்பட்டியையடுத்த புன்னைவனம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

    வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இத்தம்பதி, மூன்றாண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார்களாம். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். மனைவியின் ஊரிலேயே பாலசுப்பிரமணியன் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்பட்டதாம்.

    இந்நிலையில், தென்மலை பகுதியில் மரியசெல்வியின் தாய் இன்னாசியம்மாளுக்குச் சொந்தமான வயலிலுள்ள மரத்தில் பாலசுப்பிரமணியன் திங்கள்கிழமை தூக்கில் சடலமாக தொங்கினாராம்.  தகவலறிந்த  சிவகிரி போலீஸார்,  அவரது சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai