மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி
By கோவில்பட்டி | Published on : 02nd June 2015 03:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூர், முடுக்குமீண்டான்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் மாணவர்களுக்கான 5 நாள் பயிற்சி முகாம் நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இக்கல்லூரி மற்றும் தமிழ்நாடு ஐசிடிஏசிடி இணைந்து, பாரத பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நடத்திய இப்பயிற்சி முகாம் மே 27ஆம் தேதி தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் சண்முகவேல் தலைமை வகித்து, முகாமைத் தொடங்கிவைத்தார்.
முகாம் ஒருங்கிணைப்பாளர் பரமசிவன் முன்னிலை வகித்தார்.
முகாமில், கணினி மற்றும் வலைதளம் பயன்படுத்தும் முறை, இணையதளம், மின்னஞ்சல் பயன்படுத்துவது ஆகியன குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஏற்பாடுகளை மகாராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.