சுடச்சுட

  

  மார்த்தாண்டம் அருகே கோயில்,தேவாலயத்தில் திருட்டு

  By களியக்காவிளை  |   Published on : 02nd June 2015 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மார்த்தாண்டம் அருகே கோயில், தேவாலயத்தில் புகுந்து, அங்கிருந்த காணிக்கைப் பெட்டியை உடைத்து பணம், பொருள்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற 12 சிவாலயங்கள்ல் ஒன்றான மார்த்தாண்டம் அருகே நட்டாலத்தில் உள்ள சங்கரநாராயணர் கோயிலில் திங்கள்கிழமை காலை பூஜை நடத்த கோயில் பூசாரி நவநீதகிருஷ்ணன் வந்துள்ளார்.

  அப்போது கோயிலில் வைக்கப்பட்டிருந்த இரு காணிக்கைப் பெட்டிகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கோயில் நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் போலீஸில் புகார் அளித்தார்.

  இதேபோன்று மலங்கரை கத்தோலிக்க தேவாலய பாதிரியார் இல்லத்தில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த தங்க நகையை திருடிச் சென்றனராம். மேலும் நட்டாலம் அருகே வாத்தியார்விளை சிஎஸ்ஐ சமூக நலக்கூடத்தின் கதவை உடைத்து அங்கிருந்து ரூ. 5,100 திருடிச் சென்றுள்ளனர்.

  இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் தனித் தனியாக வழக்குப் பதிந்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai