வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
By கோவில்பட்டி | Published on : 02nd June 2015 12:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவில்பட்டி அருகே அத்தைகொண்டானில் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட அத்தைகொண்டான் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (67). ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் குடும்பத்தினருடன் விளாத்திகுளம் அருகேயுள்ள கழுகாசலபுரத்துக்கு சென்றுவிட்டாராம்.
இந்நிலையில் இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டது குறித்து அருகில் உள்ளோர் அழகர்சாமிக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அவர் வந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் தங்கநகைகள் திருடு போனது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.