சுடச்சுட

  

  ஹெச்.ஐ.வி. பாதித்தோரின் உதவிக்காக கலை நிகழ்ச்சி

  By தூத்துக்குடி  |   Published on : 02nd June 2015 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடியில் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

  தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மற்றும் அவர்களது குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு கலை நிகழ்ச்சிகள் தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  தூத்துக்குடி மாவட்ட ஹெச்.ஐ.வி. உள்ளோர் நலச்சங்கம், அகில இந்திய அரவாணிகள் உரிமை மற்றும் மறுவாழ்வு மையம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  நடிகர் நிழல்கள் ரவி, நடிகை நிரோஷா ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.

   மேலும், தொலைக்காட்சி நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். திருநங்கைகளின் நடன நிகழ்ச்சிகள், கலைஞர்கள், பாடகர்களின் பங்கேற்ற பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஒரு திருநங்கை ஆண், பெண் பாடிய பாடலை ஒரே நேரத்தில் குரல்களை மாற்றி பாடி அசத்தினார்.

  இதையடுத்து, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார்.

   நிகழ்ச்சியில், அனைத்து மாவட்ட திருநங்கையர் அமைப்பு தலைவி மோகனாம்பாள், ஹெச்.ஐ.வி. நெட்வொர்க் இயக்குநர் ரங்கீலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai