சுடச்சுட

    

    கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட வருவாய்த் துறை ஊழியர்கள்

    By தூத்துக்குடி  |   Published on : 03rd June 2015 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் காவல் ஆய்வாளரைக் கண்டித்து வருவாய்த் துறை ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டை அணிந்தபடி பணிகளை மேற்கொண்டனர்.

    தூத்துக்குடியில் வருவாய்த் துறை ஊழியர்களை பழிவாங்கும் நோக்குடன் வடபாகம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் செயல்பட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தூத்துக்குடியில் வருவாய்த் துறை ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

    வருவாய்த் துறை அலுவலர்கள் மீது வடபாகம் காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai