சுடச்சுட

    

    குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி நாசரேத் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

    By சாத்தான்குளம்  |   Published on : 03rd June 2015 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இரண்டு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி நாசரேத் பேரூராட்சி அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

    நாசரேத் தேர்வுநிலை பேரூராட்சிக்குள்பட்ட 4ஆவது வார்டு பெத்தானியாநகர், காட்டுநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள மக்கள் குடிநீர் வசதி பெற இப்பகுதியில் ஒரு சின்டெக்ஸ் தொட்டி அமைத்து அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்தொட்டியிலிருந்து கடந்த 2 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.

    இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள்,பெண்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை நாசரேத் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இப்போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உதவிச் செயலர் சுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட தொழிற்சங்க பொதுச்செயலர் கிருஷ்ணராஜ், நகரச் செயலர் டி.ஞானபால், உதவிச் செயலர் மாணிக்கம், சிறுகதை எழுத்தாளர் ஆறுமுகபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நாசரேத் பேரூராட்சித் தலைவர் ரவி செல்வகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai