சுடச்சுட

  

  கோவில்பட்டி அரசு மருத்துவமனை நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த முடிவு

  By கோவில்பட்டி  |   Published on : 03rd June 2015 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டி அரசு மருத்துவமனை நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது என, ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை 1915இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடவும், மருத்துவமனையின் மேம்பாடு குறித்தும் மருத்துவமனை ஆலோசனைக் குழுக் கூட்டம் மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  மருத்துவமனைக் கண்காணிப்பாளர் பூவேஸ்வரி தலைமை வகித்தார். கூட்டத்தில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி,  கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, அரிமா சங்க முன்னாள் ஆளுநர் எம்.எஸ்.எம்.ஆர்.சீனிவாசகம், இந்திய மருத்துவ கழக கோவில்பட்டி கிளை தலைவர் சீனிவாசன், பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை தலைவர் பரமசிவம், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனத் தலைவர் தேன்ராஜா, ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்த இந்திராணி, ஜனக் கல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா, நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கச் செயலர் சேதுரத்தினம், சமூக ஆர்வலர்கள் அய்யாத்துரைப்பாண்டியன், மாரிமுத்து ஆகியோர் பேசினர்.

  முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள் முத்துலட்சுமி, ராஜேந்திரன், கமலா ரவிசந்திரன், ஜெமினி என்ற அருணாசலசாமி, மனித நேய உதவும் கரங்கள் நிறுவனர் இந்தியன் பிரகாஷ், மக்கள் நல்வாழ்வு அறக்கட்டளை நிறுவனர் செந்தில், மருத்துவர் சுதா, பொதுப்பணித் துறை பொறியாளர் பரமசிவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  கூட்டத்தில், மருத்துவமனை நுழைவாயிலில் நூற்றாண்டு விழா வளைவு கட்ட வேண்டும்; நவீன சமையல் கூடம், 100 கிலோ கொள்ளளவுடன் நீராவி சலவை இயந்திரம் அயர்னிங் வசதியுடன் அமைக்க வேண்டும்; தடையில்லா தண்ணீர் வசதி,  நோயாளிகளுடன் உதவிக்கு வருபவர்கள் தங்கி உணவு அருந்திட தனியாக கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும்; உள்நோயாளிகளின் படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்; அனைத்துப் பிரிவு மருத்துவர்களின் பணியிடம், மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவமனை பணியாளர்களின் பணியிடங்களை நிரப்ப  ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

  மேலும், குழுக்கள் அமைத்து நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai