சுடச்சுட

  

  சாகுபுரத்தில் விளையாட்டு வீரர்களுக்கு கோடைக்கால பயிற்சி முகாம் தொடக்கம்

  By ஆறுமுகனேரி  |   Published on : 03rd June 2015 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனம் சார்பில், கிரிக்கெட் மற்றும் கால்பந்து வீரர்களுக்கு கோடைக்கால பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

  டி.சி.டபிள்யூ. நிறுவனம் சார்பில், விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கிலும், கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுகளில் சிறப்பாக விளையாடுவது குறித்த கோடைக்கால பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.  தொடர்ந்து முகாமுக்கான விளையாட்டு வீரர்களின் தேர்வு, கடந்த 28ஆம் தேதி மாலை டி.சி.டபிள்யூ. நிறுவன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இத்தேர்வில் கலந்துகொண்டனர்.

  இதில், தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான, பயிற்சி முகாம் தொடக்கவிழா திங்கள்கிழமை மாலை  டி.சி.டபிள்யூ. நிறுவன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.  டி.சி.டபிள்யூ. நிறுவன செயல் உதவித் தலைவர் (நிர்வாகம்) மே.சி.மேகநாதன் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், டி.சி.டபிள்யூ. நிறுவன விளையாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ஜெ.கதிர்வேல், மேலாளர் சுப்பிரமணியன், துணை மேலாளர்கள் விஜய், சித்திரவேல் மற்றும் அருணா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த பயிற்சியானது விடுமுறை நாள்களிலும் வார இறுதி நாள்களிலும் என மொத்தம் 10 நாள்கள் நடைபெற உள்ளது.

  ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர் பஷிர் அகமது, தேசிய விளையாட்டு பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியாளர் (கிரிக்கெட்) துரை ஆகியோர் இந்த பயிற்சியை அளிக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai