சுடச்சுட

    

    செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலில் வருஷாபிஷேகம்

    By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 03rd June 2015 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்துங்கநல்லூர் அருள்மிகு சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

    இக்கோயிலில் கடந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து இந்தாண்டு வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது.  பின்னர், சுந்தரபாண்டிய சாஸ்தா, பேச்சியம்மன், வன்னவராயன் கோயில் கும்பத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், மும்பை அன்னதான அறக்கட்டளை துணைத் தலைவர் முத்து, செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜசுந்தர், வார்டு உறுப்பினர் வேம்புதுரை, குட்டி, ஓய்வுபெற்ற ஆசிரியர் துரைராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சிவராம்பிரபு தலைமையில் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai