Enable Javscript for better performance
திருச்செந்தூர் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

    By திருச்செந்தூர்  |   Published on : 03rd June 2015 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் சுப்பிரமணியபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 4ஆம் கால யாக பூஜையும், ஹோமம், ஸ்பர்ஸாகுதி, மஹாபூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், ஸ்ரீ மாரியம்மனுக்கு விமான அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், அம்மன் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானமும், இரவு அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டி தலைவர் வி.டி.முருகன், செயலர் வி.எம்.செந்தில்குமார், பொருளாளர் எம்.ஜெகன், துணைத்தலைவர் எஸ்.டி.செந்தில்வேல், துணைச்செயலர் எஸ்.எ.செந்தில்குமார், மு.சுரேஷ்பாபு உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai