சுடச்சுட

    

    தூத்துக்குடியில் அனுமதியின்றி மது விற்றவர் கைது

    By தூத்துக்குடி  |   Published on : 03rd June 2015 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் அனுமதியின்றி மது விற்றவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூர்த்தி தெரு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மத்திய பாகம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, ஆய்வாளர் ரேணியஸ் ஜேசுபாதம் தலைமையிலான போலீஸார் அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த பகவத்சிங் (41) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 27 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai