சுடச்சுட

  

  தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு

  By தூத்துக்குடி  |   Published on : 03rd June 2015 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர், மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றனர்.

  தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

  அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.

  வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

  இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. மாணவர், மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்று திரும்பினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai