Enable Javscript for better performance
மாயமான மாலுமியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மாயமான மாலுமியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    By தூத்துக்குடி  |   Published on : 03rd June 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அந்தமான் தீவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாயமான தூத்துக்குடி மாலுமியை கண்டுபிடித்து தர மத்திய  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தூத்துக்குடி தட்டார்தெருவைச் சேர்ந்தவர் கைத்தான் (36). தோணியில் மாலுமியாக பணியாற்றி வந்த கைத்தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹட்பே என்ற தீவில் இருந்து அந்தமான் நிகோபர் தீவுக்கு 6 தொழிலாளர்களுடன் ஒரு தோணியில் சரக்கு ஏற்றிச் சென்றார்.

    இருப்பினும், தோணி குறிப்பிட்ட தீவிற்கு சென்றடையாத நிலையில் தோணியில் இருந்த கைத்தான் உள்ளிட்ட 6 பேரும் என்ன ஆனார்கள் என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில், காணாமல் போன தனது கணவர் கைத்தானை கண்டுபிடித்து தருமான அவரது மனைவி மரிய கொலம்பியா, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர், மத்திய கப்பல் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், மாயமான தனது கணவர் உள்ளிட்ட 6 பேரையும் தேடும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மரிய கொலம்பியா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai