சுடச்சுட

  

  வனத்திருப்பதி-புன்னைநகர் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் ஜூன் 4 இல்  வருஷாபிஷேகம்

  By சாத்தான்குளம்  |   Published on : 03rd June 2015 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குரும்பூர் அருகே உள்ள வனத்திருப்பதி-புன்னைநகர் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்-ஸ்ரீ ஆதிநாராயணர் கோயில்-ஸ்ரீ சிவனணைந்த பெருமாள் கோயிலில் 6ஆவது வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை (ஜூன் 4)நடைபெறுகிறது.                                              

  இக் கோயிலில் ஆறாவது வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு மேல் 12 மணிக்குள் நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் 10 மணி வரை கும்பகோணம்-பெருஞ்சோதி, கலைமணி பி.எம்.பி.முருகன் குழுவினரின் சிறப்பு நாகசுரமும்,  மாலை 6 மணிக்கு மேல் மேளதாளத்துடன் கருடவாகனத்தில் உற்சவர் ஸ்ரீநிவாச பெருமாள் திருவீதி உலாவும், 6:30 மணிக்கு மேல் சிறப்பு வாணவேடிக்கையும்,இரவு 7 மணிக்கு நெல்லை பிரபாகரன் குழுவினரின் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

  ஏற்பாடுகளை சென்னை ஹோட்டல் சரவணபவன் நிறுவனரும்,வனத்திருப்பதி புன்னை ஸ்ரீநிவாச பெருமாள்- ஸ்ரீ ஆதிநாராயணர் கோயில் நிறுவனரும்,  நிரந்தர கைங்கர்யதாரருமான பி.ராஜகோபால் தலைமையில் அவரது குமாரர்கள் பி.ஆர்.ஷிவக்குமார், ஆர்.சரவணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai