சுடச்சுட

    

    விலையில்லா பொருள்கள் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

    By கோவில்பட்டி  |   Published on : 03rd June 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட சிந்தாமணி நகர் மற்றும் செண்பகா நகர் பகுதி மக்களுக்கு மிக்ஸி, கிரைண்டர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கூசாலிபட்டி, தாமஸ் நகர், லாயல் மில் காலனி, வடக்கு இலுப்பையூரணி ஆகிய பகுதிகளில் அரசின் விலையில்லாப் பொருள்களான மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.

    இந்நிலையில் 1ஆவது வார்டுக்கு உள்பட்ட சிந்தாமணி நகர், செண்பகா நகர் பகுதி மக்களுக்கு பொருள்கள் பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கப்படவில்லையாம். ஆனால் அதே வார்டுக்கு உள்பட்ட இலுப்பையூரணி பகுதி மக்களுக்கு அடையாள அட்டையை வருவாய்த் துறையினர் வழங்கினார்களம். இதையடுத்து சிந்தாமணி நகர் மற்றும் செண்பகா நகர் பகுதி மக்களுக்கு அடையாள அட்டையை வழங்க வலியுறுத்தி வார்டு உறுப்பினர் முருகபூபதி தலைமையில் கோவில்பட்டி - சாத்தூர் சாலையில் வேலாயுதபுரம் விலக்கில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்தவுடன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார், வட்டாட்சியர் ஜோதி ஆகியோர் அங்கு சென்று போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஏ.எஸ்.பி. அலுவலகம் முற்றுகை:  இடைச்செவல் அருகேயுள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலையரசனை, அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் அவதூறாகப் பேசி கடந்த சில நாள்களுக்கு முன்பு தாக்கினாராம்.

    இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில், கலையரசனை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் தாவீதுராஜா தலைமையில் அப்பகுதி பொதுமக்கள்,ஏ.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர், ஏ.எஸ்.பி. முரளிரம்பாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கையைப் பெற்றுக் கொண்ட ஏ.எஸ்.பி., இதுகுறித்து விசாரணை செய்து முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதையடுத்து, போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai