Enable Javscript for better performance
இளைஞர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    நாசரேத் அருகே மின்மாற்றியில் ஏறி இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

    வைத்திலிங்கபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ப. அய்யாக்குட்டி (39). விவசாயியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாம். மேலும், இவர் வேலைக்கும் போகாமல் இருந்து வந்தாராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவருடைய மனைவி மேரி, மகனை பள்ளியில் சேர்க்க பணம் கேட்டாராம்.

    இந்நிலையில் பணம் இல்லாததால் மனமுடைந்த அய்யாக்குட்டி மது அருந்திவிட்டு அங்குள்ள மின்மாற்றியில் ஏறி, மின்சாரத்தை தன் உடலில் பாய்ச்சி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நாசரேத் காவல் ஆய்வாளர் (பொ) விஜயகுமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai