சுடச்சுட

    

    எட்டயபுரத்தில் கார் கவிழ்ந்து விபத்து: லேத் பட்டறை உரிமையாளர் சாவு

    By எட்டயபுரம்  |   Published on : 04th June 2015 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எட்டயபுரம் புறவழிச் சாலையில் புதன்கிழமை கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் திருச்சியைச் சேர்ந்த லேத் பட்டறை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இருவர் காயமடைந்தனர்.

    திருச்சி அருகே திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50). இவர், திருச்சியில் லேத் பட்டறை நடத்தி வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர்களான சேகர் (52), சிவா (29) உள்ளிட்டோரும் திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்குச் செல்வதற்காக புதன்கிழமை காரில் சென்று கொண்டிருந்தனராம். அப்போது தூத்துக்குடி - மதுரை நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள எட்டயபுரம் புறவழிச் சாலை பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டிச் சென்ற செல்வராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், காரில் பயணம் செய்த மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனர்.தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று  செல்வராஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai