சுடச்சுட

  

  கருணாநிதி பிறந்த நாள்: தூத்துக்குடியில் கொண்டாட்டம்

  By தூத்துக்குடி  |   Published on : 04th June 2015 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திமுக தலைவர் கருணாநிதியின் 92ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில், பழைய பேருந்து நிலையம் முன் புதன்கிழமை 92 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

  பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. பகல் 12 மணிக்கு மாவட்ட திமுக சார்பில், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள முதியோர் இல்லம், ஆரோக்கியபுரம் தொழுநோய் மருத்துவமனை, எஸ்.எஸ்.மாணிக்கபுரம் ஊனமுற்றோர் பள்ளி, பிரையண்ட் நகர் காதுகேளாதோர் பள்ளி ஆகியவற்றில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

  இந்நிகழ்ச்சிகளில், மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், திமுக மாநகரச் செயலர் ஆனந்தசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆ.திருச்சிற்றம்பலம், முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம், மாவட்ட துணைச் செயலர் ராஜமோகன் செல்வின், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் கோட்டுராஜா, பகுதிச் செயலர் சுரேஷ்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

  திருச்செந்தூர்: திருச்செந்தூர் நகர திமுக சார்பில் 20ஆவது வார்டு பகுதியில் கட்சிக் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

  நகர அவைத்தலைவர் பி.கே.செல்வராஜ் தலைமை வகித்தார். இதில், திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் செங்குழி எ.பி.ரமேஷ் கட்சிக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். திருச்செந்தூர் ஒன்றிய திமுக சார்பில் திருச்செந்தூர், ஆறுமுகனேரி, கானம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

  ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் பகுதிகளில்...

  ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் திமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  நகரச் செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் கந்தசிவசுப்பு, சண்முகசுந்தரம், சிவலிங்கராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் கொம்பையா, ஒன்றிய பொருளாளர் செல்லையாபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  செய்துங்கநல்லூரில் அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஒன்றிய செயலாளர் நல்லமுத்து தலைமை வகித்தார்.

  கோவில்பட்டி: கயத்தாறு பேரூராட்சி அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற விழாவுக்கு, கயத்தாறு நகர திமுக செயலரும், பேரூராட்சித் தலைவருமான சுடலைமணி தலைமை வகித்து, கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார்.

  கோவில்பட்டி பிரதான சாலை தமிழரசன் நினைவு படிப்பகம் முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றியச் செயலர் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் முன்னிலை வகித்தார். நகரச் செயலர் கருணாநிதி கட்சிக் கொடியேற்றினார்.

  உடன்குடி: உடன்குடி பிரதான பஜார், பேருந்து நிலையம், வில்லி குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றிய திமுக அவைத்தலைவர் ரிபாய்தீன் தலைமை வகித்தார். உடன்குடி ஒன்றிய திமுக செயலர் பெ.பாலசிங், நகரச் செயலர் ஜாண் பாஸ்கர் ஆகியோர் இனிப்பு வழங்கினர்.

  சாத்தான்குளம்:சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் ஒன்றிய, நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஒன்றிய திமுக செயலரும், பேரூராட்சித் தலைவருமான ஆ.செ. ஜோசப் தலைமை வகித்தார். பேய்க்குளத்தில் ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய திமுக சார்பில்  நடைபெற்ற விழாவுக்கு ஒன்றியச் செயலர் எஸ்.பார்த்திபன் தலைமை  வகித்து கட்சிக் கொடியேற்றினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai