சுடச்சுட

    

    காயல்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பராஅத் இரவு கடைப்பிடிக்கப்பட்டது. இதில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவு நிஸ்ஃபு ஷஃபான் (ஷஃபானில் பாதி) என அழைக்கப்படும். ஷபே பராஅத், பராஅத் இரவு என்ற பெயர்களிலும் அழைக்கப்படும் இந்த இரவில், நீண்ட ஆயுளை வேண்டியும், தீவினைகளிலிருந்து பாதுகாப்பு வேண்டியும், படைத்தவனைத் தவிர்த்து படைப்பினங்களின் உதவிகளிலிருந்து தேவையற்றிருக்கச் செய்யக் கோரியும் திருமறை குர்ஆனின் யாஸீன் அத்தியாயத்தை 3 முறை ஓதி, பிரார்த்திப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

    காயல்பட்டினத்திலுள்ள புதுப்பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, மஸ்ஜித் மீக்காஈல், குருவித்துறைப் பள்ளி, மஹ்ழரா, ஜாவியா உள்ளிட்ட பல இடங்களில்  பராஅத் இரவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    இந்நிகழ்ச்சிகளில் அந்தந்த மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த ஆண்கள் திரளாகக் கலந்துகொண்டனர். குருவித்துறை பள்ளியில், அப்பள்ளியின் இமாம் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ தலைமையில் பராஅத் நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, பராஅத் இரவு குறித்து விளக்கவுரையாற்றினார்.

    இதையடுத்து அனைவரும் யாஸீன் ஓதினர். ஓ.எல்.நூஹ் ஸிராஜுத்தீன் பாக்கவீ துஆ ஓதி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

    காயல்பட்டினம் ஜாவியாவில் இரவு 8 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு கலீபத்துல் குலஃபா எஸ்.எம்.முத்துவாப்பா ஃபாஸீ தலைமை வகித்தார்.

    பராஅத் இரவின் மகத்துவம் மற்றும் மார்க்கக் கல்வியின் அவசியம் குறித்து, ஜாவியா அரபிக் கல்லூரியின் துணை முதல்வர் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ சிறப்புரையாற்றினார். நிறைவில் அனைவருக்கும் நேர்ச்சை விநியோகிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai