சுடச்சுட

    

    சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் அம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட்டத்தை தடை செய்ததைக் கண்டித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், கோவில்பட்டியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் வழக்குரைஞர் மு.ரவிகுமார் தலைமை வகித்து, ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். கோவில்பட்டி ஒன்றியச் செயலர் அன்புராஜ், ஒன்றியத் தலைவர் சுப்புராஜ், இளைஞரணிச் செயலர் பெருமாள்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், கயத்தாறு ஒன்றியச் செயலர் குட்டியப்பன், மாவட்ட இளைஞரணிச் செயலர் பாலமுருகன், கயத்தாறு ஒன்றிய இளைஞரணிச் செயலர் கனகராஜ், கழுகுமலை நகரச் செயலர் சக்திவேல், மாவட்டப் பொருளாளர் மதிராஜசேகர், கூசாலிபட்டியைச் சேர்ந்த முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai