சுடச்சுட

  

  கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மே 12ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) நிறைவடைந்தது. இதில் பெறப்பட்ட 1,447 மனுக்களில் 869 மனுக்கள் ஏற்கப்பட்டன.

  இளையரசனேந்தல் உள்வட்டத்துக்கு உள்பட்ட அய்யனேரி, ஜமீன்தேவர்குளம், பிள்ளையார்நத்தம் பகுதிகளைச் சேர்ந்த 135 பேர் செவ்வாய்க்கிழமை மனுக்களை அளித்தனர். 

  இதில், 58 பேருக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையை ஜமாபந்தி அலுவலரும், கோவில்பட்டி கோட்டாட்சியருமான கண்ணபிரான் வழங்கினார்.

  ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களில், 144 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 434 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

  நிலுவையில் உள்ள மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என வட்டாட்சியர் ஜோதி தெரிவித்தார்.

  இதில், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சூரியகலா, வருவாய் ஆய்வாளர்கள் பாலு, வனஜா, மண்டல துணை வட்டாட்சியர் ஆறுமுகச்சாமி, உதவியாளர்கள் மலர்விழி, முத்துக்கண்ணன் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai