சுடச்சுட

    

    திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

    By திருச்செந்தூர்  |   Published on : 04th June 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை ஐஐடி கல்லூரியில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தைக் கண்டித்து திருச்செந்தூர் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருச்செந்தூர் பேரூராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலர் ஆ.சங்கத்தமிழன் தலைமை வகித்தார். மகளிர் விடுதலை இயக்க மாநில துணைச் செயலர் இந்திரா, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைசெழியன், மாவட்ட செய்தித்தொடர்பாளர் இர.பு.தமிழ்க்குட்டி, திருச்செந்தூர் ஒன்றியப் பொருளாளர் ராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உடன்குடி:தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் உடன்குடி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் முரசு தமிழப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் தமிழ்வளவன், உடன்குடி ஒன்றியச் செயலர் தமிழ்வாணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூலான்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், துரும்பர் விடுதலை இயக்க மாவட்ட அமைப்பாளர் சிவா, மாவட்ட ஊடக மைய பொறுப்பாளர் வேம்படிமுத்து, முற்போக்கு மாணவர் கழக துணை அமைப்பாளர் பாஸ்கர், உடன்குடி ஒன்றிய துணைச் செயலர்கள் விஜயன், ராமலிங்கம், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை துணை அமைப்பாளர் பன்னீர், உடன்குடி நகரச் செயலர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai