சுடச்சுட

    

    தூத்துக்குடியில் அம்மா உணவகம் மூன்றாமாண்டு தொடக்க விழா

    By தூத்துக்குடி  |   Published on : 04th June 2015 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் அம்மா உணவகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் இப்போது 10 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு இரண்டாண்டுகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாமாண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இதையொட்டி தூத்துக்குடி மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தலைமையில் புதிய பேருந்து நிலையம், ஸ்டேட் பாங்க் காலனி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அம்மா உணவகங்களில் 3 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பீ.சேவியர், மாநகராட்சி ஆணையர் சோ. மதுமதி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், அதிமுக இளைஞரணி நிர்வாகி ஏபிஆர் கவிஅரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai