Enable Javscript for better performance
தூத்துக்குடியில் நாளை மீனவர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் நாளை மீனவர் குறைதீர் கூட்டம்

    By தூத்துக்குடி  |   Published on : 04th June 2015 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கான குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திகுறிப்பு:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.   இந்தக் கூட்டத்தில் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், ஊர்த் தலைவர்கள், பெரியவர்கள் அவர்கள் பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும்.  மேலும், அந்தப் பொருள் மீதான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    எனவே,  கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai