சுடச்சுட

    

    தூத்துக்குடியில் வாலிபர் சங்கத்தினர் நூதனப் போராட்டம்

    By தூத்துக்குடி  |   Published on : 04th June 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் பழுதான நிலையில் காணப்படும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 34ஆவது வார்டு பகுதியான தபால் தந்தி காலனி பகுதிகளில் சாலைகள் பழுதான நிலையில் காணப்படுவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வரும் நிலையில் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து, சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தபால் தந்தி காலனி கிளைச் செயலர் பாலமுருகன் தலைமையில், புதன்கிழமை சாலைகளில் ஊன்றுகோல் ஊன்றி நடந்துச் செல்லும் போராட்டம் நடைபெற்றது. ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் எம்.எஸ். முத்து,  கிளைத் தலைவர் பேச்சிமுத்து, கிளைப் பொருளாளர் வீரா,  மாநகரக் குழு உறுப்பினர் கண்ணன், மாதர் சங்க மாநகரத் தலைவர் கமலம், செயலர்

    தசலீஸ், நிர்வாகிகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai