சுடச்சுட

  

  திருச்செந்தூரில் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

  நாகர்கோவில் பார்வதிபுரம் சாரதா நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி (45). இவரது மனைவி சுகந்தனி (35). இவர்கள் குடும்பத்துடன் ஜூன் 1ஆம் தேதி திருச்செந்தூர் கோயிலுக்கு வந்துள்ளனர். அப்போது கடலில் இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது சுகந்தனி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 5 பவுன் எடையுடைய 2 சங்கிலிகளை மர்மநபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டார்.

  இதுகுறித்து சுகந்தனி திருச்செந்தூர் கோயில் போலீஸாரிடம் புகார் செய்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலையில் நாழிக்கிணறு அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை காவல் ஆய்வாளர் பி.பட்டாணி பிடித்து விசாரித்தார். விசாரணையில், அவர் திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முத்துலிங்கம் (29) என்பதும், கடலில் குளித்துக் கொண்டிருந்த சுகந்தனியிடம் இருந்து தங்கச் சங்கிலிகளை பறித்தது அவர்தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து ஒன்றரை பவுன் நகையை மீட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai