சுடச்சுட

    

    தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு அரசின் இலவச பயண அட்டை வழங்கப்பட்டது.

    தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி பள்ளி மாணவர், மாணவிகளுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் விழா தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக திருநெல்வேலி மண்டல துணை மேலாளர் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு அரசின் இலவச பேருந்து அடையாள அட்டையை வழங்கினார்.   தூத்துக்குடி அரசு போக்குவரத்துக்கழக மண்டல மேலாளர் முருகன், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மருதையா, சண்முகராஜ், போக்குவரத்து கழக அலுவலர்கள் பாஸ்கர்,  சோபன் பாலசிங் உள்பட கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai