சுடச்சுட

    

    முக்காணி அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முக்காணி - தூத்துக்குடி நெடுஞ்சாலையோரம் உள்ள ஆரியங்காவு அய்யனார் கோயில் அருகில் முட்புதருக்குள் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் புதன்கிழமை மாலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் போலீஸார்  அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்சாம்ராஜ் வழக்குப்பதிவு செய்தார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai