Enable Javscript for better performance
ஸ்ரீவைகுண்டத்தில் இடியுடன் கனமழை- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவைகுண்டத்தில் புதன்கிழமை பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழாண்டில் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் குறைந்த அளவே இருந்தது. எனினும் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னர் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் புதன்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வந்த வெயிலின் தாக்கம் குறைந்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai