சுடச்சுட

    

    கோவில்பட்டி, இலுப்பையூரணியில் 4,625 பேருக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

    இந்நிகழச்சிக்கு ஊராட்சித் தலைவி செல்வி தலைமை வகித்தார்.  கோட்டாட்சியர் கண்ணபிரான் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, 1ஆவது வார்டு பகுதி மக்களுக்கு அரசின் விலையில்லாப் பொருள்களை வழங்கிப் பேசினார்.

    தொடர்ந்து, இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட கூசாலிபட்டி, தாமஸ் நகர், லாயல் மில் காலனி ஆகிய பகுதிகளிலும் அரசின் விலையில்லா பொருள்களான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கப்பட்டன. கோவில்பட்டி வட்டாட்சியர் ஜோதி, ஒன்றிய கவுன்சிலர்கள் நாகராஜன், பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் பாலு, கிராம நிர்வாக அதிகாரிகள் மந்திரசூடாமணி, ராஜசேகர், வைரமுத்து உள்பட அதிமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai