Enable Javscript for better performance
இன்று ஆழ்வார்திருநகரியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் விழா- Dinamani

சுடச்சுட

    

    இன்று ஆழ்வார்திருநகரியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் விழா

    By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 05th June 2015 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆழ்வார்திருநகரியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை(ஜூன் 5) நடைபெறுகிறது.

    மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம், கிரீன் குளோப் மற்றும் ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்தும் இவ்விழாவுக்கு கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனரும், நடிகருமான விவேக் தலைமை வகிக்கிறார்.

     ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. விஜயகுமார், ஆழ்வார்திருநகரி பேரூராட்சித் தலைவர் ஆதிநாதன், இந்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.  கிராம உதயம் நிறுவனரும், இயக்குநருமான சுந்தரேசன், நடிகர் செல்முருகன், கிராம உதயம் மேல ஆழ்வார்தோப்பு கிளை அலுவலக மேலாளர் வேல்முருகன், ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பலர் வாழ்த்திப் பேசுகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai