சுடச்சுட

    

    இளைஞர்கள் மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு

    By கோவில்பட்டி  |   Published on : 05th June 2015 05:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடம்பூர் அருகே இளைஞர்களை  தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுந்தரேஸ்வரபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் கருத்தப்பாண்டி (27). இவரும், அதே ஊரைச் சேர்ந்த சண்முகராஜ் (20), செல்லத்துரை (29) ஆகியோர் புதன்கிழமை இரு பைக்குகளில் கீழப்பாறைப்பட்டி விலக்கு அருகே  சென்று கொண்டிருந்தார்களாம்.

    அப்போது கீழப்பாறைப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த தெய்வநாயகம், லட்சுமி, மகாலட்சுமி, மேலத் தெருவைச் சேர்ந்த மூக்கன் மற்றும் 2 பேர் அவர்களை வழிமறித்து அவதூறாகப் பேசி தாக்கினார்களாம். பின்னர் கொலை மிரட்டலும் விடுத்தார்களாம். இதில், காயமடைந்த மூவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து கருத்தப்பாண்டி அளித்த புகாரின்பேரில் தெய்வநாயகம், மூக்கன், லட்சுமி, மகாலட்சுமி ஆகிய 4 பேர் மீது கடம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai