சுடச்சுட

  

  கிராம விளையாட்டுப் போட்டிகள்:ஆட்சியர் ஆலோசனை

  By தூத்துக்குடி  |   Published on : 05th June 2015 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் ம. ரவிகுமார் ஆலோசனை மேற்கொண்டார்.

  தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 403 கிராம ஊராட்சிகளில்  201 கிராம ஊராட்சிகளில் முதல் கட்டமாக கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது.  இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 202 கிராம ஊராட்சிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் ம. ரவிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீரபத்திரன்,  காவல் துணை கண்காணிப்பாளர் நேரு,  உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) லட்சுமணன்,  மாவட்ட கல்வி அலுவலர் திம்மராசு, பள்ளி துணை ஆய்வாளர் செல்வம் குருசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர் ஜோதி சற்குணம் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள்  கலந்துகொண்டனர்.

  ராஜீவ் காந்தி கேல் அபியான் திட்டம்:   தூத்துக்குடி மாவட்டத்தில் 2014-2015 ஆம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் அபியான் திட்டத்தை 3 ஊராட்சி ஒன்றியங்களில் ஒவ்வொரு இடத்திலும் 7 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 80 லட்சத்தில் ஒரு உள்விளையாட்டரங்கம், ரூ. 8 லட்சத்தில் ஒரு வெளி விளையாட்டரங்கம், ரூ.15 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ரூ.1.5 லட்சத்தில் நாற்காலி, மேஜைகள் இவை சேர்த்து மொத்தம் ரூ.177.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆட்சியர் ஆலோசனை வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai