சுடச்சுட

  

  கோவில்பட்டியில் இரு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி

  By கோவில்பட்டி  |   Published on : 05th June 2015 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டி வடக்கு இலுப்பையூரணி மற்றும் லாயல் மில் காலனி ஆகிய இரு இடங்களில் தகுதி படைத்த அனைவருக்கும் விலையில்லா பொருள்கள் வழங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

  இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட வடக்கு இலுப்பையூரணி, கூசாலிபட்டி, தாமஸ் நகர் மற்றும் லாயல் மில் காலனி ஆகிய  பகுதிகளைச் சேர்ந்த 4,625 பேருக்கு அரசின் விலையில்லா பொருள்களான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், வடக்கு இலுப்பையூரணியில் அடையாள அட்டை வழங்கியவர்களுக்கு காலதாமதமின்றி உடனடியாக விலையில்லா பொருள்கள் வழங்க வேண்டும் எனக் கோரி அப்பகுதி பொதுமக்கள் வேலாயுதபுரம் விலக்கில் சாலை மறியலில் ஈடுபட சென்றனர்.

  அதுபோல, லாயல் மில் காலனி மற்றும் வடக்கு இலுப்பையூரணியில் தகுதி படைத்த குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விலையில்லா பொருள்களை வழங்க வேண்டும் எனக் கோரி கடலையூர் சாலையில் லாயல் மில் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

  தகவலறிந்தவுடன் வட்டாட்சியர் ஜோதி, கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரென்னீஸ் ஆகியோர் சென்று, சாலை மறியலில் ஈடுபட முயன்ற போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  அப்போது வட்டாட்சியர் கிராமப்புறங்களில் குடியிருந்து தகுதி படைத்த குடும்ப அட்டைதாரர்கள் நகர்ப்புறங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வாங்குவோருக்கு திங்கள்கிழமை விலையில்லா பொருள்கள் வழங்கப்படும் என்றும், அடையாள அட்டை பெற்றவர்களுக்கும் விலையில்லா பொருள்கள் எவ்வித தடையுமின்றி வழங்கப்படும் எனக் கூறியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai