சுடச்சுட

  

  சாயர்புரத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

  By தூத்துக்குடி  |   Published on : 05th June 2015 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரத்தில் சனிக்கிழமை (ஜூன் 6) நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் பதிவு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் ம. ரவிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுக்கும் வகையில்,  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதுவாழ்வுதிட்டம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியன மூலம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் சாயர்புரம் போப் கல்லூரியில் சனிக்கிழமை (ஜூன் 6) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

  இதில், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது நிறுவனத்துக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.  முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் என இருபாலாரும் கலந்துகொள்ளலாம்.

  இந்த முகாமில் சனிக்கிழமை (ஜூன் 6)  காலை 9 மணிக்கு தங்களுடைய சுய விவரங்கள் மற்றும் கல்வி சான்றிதழுடன், சாயர்புரம் போப் கல்லூரியில் தங்கள் பெயர் மற்றும் கல்வித் தகுதி குறித்த விவரங்களை முன்பதிவு செய்து முகாமில் கலந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு 0461  2341282 என்ற தொலைபேசி எணணிலும், 94450 34219, 9840504415, 9445034221 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai