சுடச்சுட

    

    சொத்து தகராறு: ஓட்டப்பிடாரத்தில் முதியவர் அடித்துக் கொலை

    By தூத்துக்குடி  |   Published on : 05th June 2015 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓட்டப்பிடாரம் அருகே வியாழக்கிழமை சொத்து தகராறில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

    ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கீழமுடிமண் கிராமத்தைச் சேர்ந்தவர் மரியஜோசப் (80). இவருக்கு, ராணி என்ற மனைவியும், ராஜ், ஜேசுராஜ், அல்போன்ஸ் என மூன்று மகன்களும் உள்ளனர்.

    இவர்களில் ராஜ் தாப்பாத்தியிலும்,  ஜேசுராஜ் தூத்துக்குடியிலும் வசித்து வருகின்றனர். அல்போன்ஸ் கீழமுடிமண் கிராமத்தில் வசித்து வருகிறார்.

    மரியஜோசப்புக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை பிரித்து தருமாறு கடந்த சில மாதங்களாக அல்போன்ஸ் தனது தந்தையிடம்  கூறி வந்தாராம். இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.  இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் இருந்த மரியஜோசப்பிடம் சொத்தை பிரித்து தருமாறு அல்போன்ஸ் தகராறு செய்தாராம்.

    அப்போது திடீரென உருட்டுக் கட்டையால் அல்போன்ஸ் தாக்கியதில் காயமடைந்த மரியஜோசப் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த  ஓட்டப்பிடாரம் போலீஸார் அங்கு சென்று மரியஜோசப்பின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தப்பியோடிய அல்போன்ûஸ போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai