சுடச்சுட

    

    ஜீப் கவிழ்ந்து விபத்து: காவல் ஆய்வாளர் உள்பட இருவர் காயம்

    By சாத்தான்குளம்  |   Published on : 05th June 2015 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகே ஜீப் கவிழ்ந்ததில் செய்துங்கநல்லூர்  காவல் ஆய்வாளர் உள்பட  இருவர் காயமடைந்தனர்.

    செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாசுந்தர் (50). காவலர் சுப்பையா (44) இருவரும் வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை காலையில் போலீஸ் ஜீப்பில் சாத்தான்குளம் சென்றனராம். அங்கு விசாரணையை முடித்து விட்டு, ஊர் திரும்பிய போது சாத்தான்குளம் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் அருகில் ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமுள்ள தோட்டத்துக்குள் புகுந்து கவிழ்ந்ததாம். இதில் காயமடைந்த ஆய்வாளர் ராஜாசுந்தர், ஓட்டுநர் சுப்பையா இருவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தை சாத்தான்குளம் டிஎஸ்பி கனகராஜ் பார்வையிட்டார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai