சுடச்சுட

  

  தூத்துக்குடியில் உலக புகையிலை ஒழிப்பு தினம்

  By தூத்துக்குடி  |   Published on : 05th June 2015 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தில், உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

   இதை முன்னிட்டு, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம், மருத்துவ முகாம், புற்றுநோய் விழிப்புணர்வு முகாம், கண் பரிசோதனை முகாம், எச்.ஐ.வி. பரிசோதனை முகாம் ஆகியன நடைபெற்றன.

   முகாமை, நிறுவன தலைமை மருத்துவ அலுவலர் மற்றும் சமுதாய வளர்ச்சிப் பிரிவுத் தலைவர் கைலாசம், அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் பிரீத்தி சரவணன், லாஜிஸ்டிக்ஸ் பிரிவுத் தலைவர் ஹரிகரன், பாதுகாப்பு துறைத் தலைவர் அனூப் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில், 400-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். கண் பரிசோதனை மூலம் குறைபாடு அறியப்பட்ட 52 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது. மேலும், சாலைப் பாதுகாப்பு வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai