சுடச்சுட

    

    3 இடங்களில் இன்று அம்மா திட்ட சிறப்பு முகாம்

    By தூத்துக்குடி  |   Published on : 05th June 2015 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி,  ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் கிராமத்திலும், கோவில்பட்டி வட்டத்தில் ஊத்துப்பட்டி கிராமத்திலும், விளாத்திகுளம் வட்டத்தில் சித்தவநாயக்கன்பட்டி கிராமத்திலும் வட்டாட்சியர்கள் தலைமையில் முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாம்களில், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரால்  நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளன.

    எனவே,  முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai